Our Surgeons எங்கள் மருத்துவர்கள்Schemes திட்டங்கள்
Specialized Careசிறப்பு சிகிச்சை

Diabetic Eye Careநீரிழிவு கண் பராமரிப்பு

Comprehensive screening and management to protect your vision from diabetes-related complications.நீரிழிவு நோயால் ஏற்படும் கண் பாதிப்புகளில் இருந்து உங்கள் பார்வையைப் பாதுகாக்க முழுமையான பரிசோதனை மற்றும் சிகிச்சை.

Understanding Diabetic Retinopathy சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பைப் புரிந்துகொள்ளுதல்

How diabetes affects your eyes சர்க்கரை நோய் உங்கள் கண்களை எவ்வாறு பாதிக்கிறது?

Over time, high blood sugar levels can damage the tiny blood vessels in the retina. These vessels may leak fluid or bleed, distorting your vision. In advanced stages, new abnormal blood vessels may grow, leading to severe vision loss. Regular screening is essential because diabetic retinopathy often has no early warning signs. காலப்போக்கில், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு விழித்திரையில் உள்ள நுண்ணிய இரத்த நாளங்களை பாதிக்கலாம். இந்த நாளங்களில் இருந்து திரவம் அல்லது இரத்தம் கசிந்து, உங்கள் பார்வையை மங்கலாக்கலாம். முற்றிய நிலையில், புதிய அசாதாரண இரத்த நாளங்கள் உருவாகி, கடுமையான பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். ஆரம்ப நிலையில் எவ்வித அறிகுறிகளும் இருக்காது என்பதால், முறையான கண் பரிசோதனை மிகவும் அவசியம்.

Common Symptomsபொதுவான அறிகுறிகள்

  • Blurred or fluctuating vision மங்கலான அல்லது அடிக்கடி மாறும் பார்வை
  • Spots or dark strings floating in your vision (floaters) பார்வையில் மிதக்கும் கரும்புள்ளிகள் அல்லது கோடுகள்
  • Impaired color vision நிறங்களை வேறுபடுத்துவதில் சிரமம்
  • Dark or empty areas in your vision பார்வையில் இருண்ட அல்லது வெற்றிடமான பகுதிகள்

Our Approach to Care எங்கள் சிகிச்சை அணுகுமுறை

The key to preventing vision loss is early detection and proactive management. At Shri Andavar Eye Care, we provide comprehensive diabetic eye exams and targeted treatments to protect your sight. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதே பார்வை இழப்பைத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும். ஸ்ரீ ஆண்டவர் ஐ கேரில், உங்கள் பார்வையைப் பாதுகாக்க முழுமையான சர்க்கரை நோய் கண் பரிசோதனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சைகளை நாங்கள் வழங்குகிறோம்.

Detailed Screenings விரிவான பரிசோதனைகள்

We recommend annual dilated eye exams and utilize advanced OCT imaging to monitor the health of your retina closely. வருடாந்திர முழுமையான கண் பரிசோதனைகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம், மேலும் உங்கள் விழித்திரையின் ஆரோக்கியத்தை கண்காணிக்க அதிநவீன OCT இமேஜிங் முறையைப் பயன்படுத்துகிறோம்.

Laser Therapy & Injections லேசர் சிகிச்சை & ஊசிகள்

When needed, precision laser treatments and specialized intravitreal injections are used to stop leakage and preserve vision. தேவைப்படும்போது, விழித்திரை கசிவை நிறுத்தவும் பார்வையைப் பாதுகாக்கவும் துல்லியமான லேசர் சிகிச்சைகள் மற்றும் சிறப்பு ஊசிகள் (Intravitreal injections) பயன்படுத்தப்படுகின்றன.

Find Us in Pollachi எங்களை வந்து சந்தியுங்கள்

Opposite LMHSS School, Palladam Road LMHSS பள்ளிக்கு எதிரில், பல்லடம் சாலையில்

A familiar landmark makes us easy to find. If you know LMHSS School, you’ll know exactly where we are.

Visit us for your eye care needs.
LMHSS பள்ளி பொள்ளாச்சியில் அனைவருக்கும் தெரிந்த ஒரு முக்கிய அடையாளம். பள்ளிக்கு நேராக எதிரிலேயே எங்கள் மருத்துவமனை அமைந்துள்ளது.

உங்கள் கண் சிகிச்சைத் தேவைகளுக்கு எங்களை அணுகவும்.

Address முகவரி
No. 73, Palladam Road,
Opposite LMHSS School,
T. Kottampatti, Pollachi – 642002
எண். 73, பல்லடம் சாலை,
LMHSS பள்ளிக்கு எதிரில்,
T. கொட்டாம்பட்டி, பொள்ளாச்சி – 642002
Consulting hours பார்வை நேரங்கள்
Mon–Sat · 10:00 AM – 2:00 PM and 5:00 – 7:00 PM
Sunday closed
திங்கள்–சனி · காலை 10:00 – மதியம் 2:00 மற்றும் மாலை 5:00 – 7:00
ஞாயிறு விடுமுறை
Telephone தொலைபேசி
04259 221 000